வியாழன், 26 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : திங்கள், 8 மார்ச் 2021 (16:43 IST)

அர்த்தமுள்ள கவிப்பாடலை ரசித்தேன் – விஜய் சேதுபதி பட இயக்குநர் டுவீட்

தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குநர்  சீனு ராமசாமி. இவர் தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை,கண்ணே கலைமானே போன்ற படங்களை இயக்கியுள்ளார்.

இவர் தற்போது, விஜய்சேதுபதி நடிப்பில் மாமனிதன் என்ற படத்தை இயக்கிவருகிறார். இப்படத்தை யுவன்சங்கர் ராஜா மற்றும் இளையராஜா இருவரும் தயாரித்து இசையமைத்து வருகின்றனர்.

இந்நிலையில்,   சீனுராமசாமி தனது டுவிட்டர் பக்கத்தில், தன்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஆவணப்பட இயக்குநர் கவிஞர் அமீர் அப்பாஸை பாராட்டி  ஒரு டுவீட் பதிவிட்டுள்ளார்.

அதில், என்னிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஆவணப்பட இயக்குநர் கவிஞர் அமீர் அப்பாஸ் இயற்றிய அர்த்தமுள்ள கவித்துவப் பாடல் மிக ரசித்தேன். https://youtu.be/fzrAtFepQxM இசையமைத்து பாடிய #இராஜபாளையம்உமாசங்கர் #யாழ்நங்கை யின் அன்பான குரல் சிறப்பு. நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

@AmeerAb84412074 எனத்தெரிவித்துள்ளார்.