திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: திங்கள், 8 மார்ச் 2021 (07:48 IST)

கமலுக்கு வில்லனாக ராகவா லாரன்ஸ்… விக்ரம் படத்தின் மாஸ் அப்டேட்!

கமல் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் ராகவா லாரன்ஸ் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் மிகப்பெரிய கமல் ரசிகர். அவரின் கைதி படத்தை விருமாண்டியின் தொடர்ச்சி என்றும் மாஸ்டர் படத்தில் நம்மவர் படத்தை நினைவுபடுத்தும் காட்சிகளும் உள்ளன. இந்நிலையில் லோகேஷ் கமலை வைத்து விக்ரம் என்ற படத்தை இயக்க உள்ளார்.  

இதற்கான போட்டோஷூட் எல்லாம் நடந்து முடிந்த நிலையில் கமல் தேர்தலுக்கு முன்னர் இந்த படத்தில் நடித்து முடிப்பதாக இருந்தார். ஆனால் இப்போது படத்தை தொடங்குவதில் சிறிது தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் படத்தில் வில்லனாக நடிக்கப் போவது யார் என்பது குறித்து பலவாறாக செய்திகள் வெளியாகின. பஹத் பாசில், நவாசுதீன் சித்திக் மற்றும் பிரபுதேவா ஆகியவர்களின் பெயர்கள் எல்லாம் பரிசீலிக்கப்பட்டது. ஆனால் இப்போது வில்லனாக நடிக்க தமிழின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான ராகவா லாரன்ஸிடம் பேச்சுவார்த்தை நடத்துவதாக சொல்லப்படுகிறது.