செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : வியாழன், 5 செப்டம்பர் 2019 (15:12 IST)

ரிலீசுக்கு வாய்ப்பில்லை?... மீண்டும் சிக்கலில் எனை நோக்கி பாயும் தோட்டா!

கௌதம் மேனன் இயக்கத்தில் தனுஷ், மேகா ஆகாஷ் நடிப்பில் உருவாகியுள்ள எனை நோக்கி பாயும் தோட்டா படம் கடந்த 2016 ஆண்டே ஆரம்பிக்கப்பட்டது. படம் ஆரம்பிக்கப்பட்ட நாலில் இருந்தே பல்வேறு பிரச்னைகளை சந்தித்து வந்த இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு இறுதியில் தான் முழுவதுமாக முடிந்தது. 


 
தயாரிப்பு தரப்பில் இருந்து பணப்பிரச்சனை நீடித்து வந்த நிலையில் ஒரு வழியாக பிரச்சனைகளை கடந்து ரிலீசுக்கு தயாரானது. அண்மையில் தான் இப்படம் வருகிற செப்டம்பர் 6ம் தேதி( நாளை)  திரைக்கு வரும் என படக்குழு தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வாமாக அறிவிக்கப்பட்டது. எனவே இதற்கான ப்ரோமோஷன் பணிகள் தீவிரமாக நடந்து வந்த நிலையில் தற்போது மீண்டு படத்தின் ரிலீஸுக்கு சிக்கல் வந்துள்ளது. 
 
இதற்கு முந்தைய படங்களுக்கு வாங்கிய கடன்கள் தற்போது  எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் கழுத்தை நெறிக்கிறது. மீண்டும் பணப்பிரச்சனை சிக்கியுள்ள இப்படத்தை எப்படியாவது சொன்ன தேதியில் வெளியிடவேண்டும் என்பதற்காக இயக்குனர் கௌதம் மேனன் லைகா நிறுவனத்தை சந்திக்க லண்டன் சென்றுள்ளாராம். 
 
எனவே இப்படம் நாளை வெளியாக வாய்ப்பில்லை என்றும். ஒருவேளை லைக்கா நிறுவனம் பணப்பிரச்சனையை தீர்த்து வைத்தால் ரிலீஸ் தேதி தள்ளி வைக்கப்பட்டு சனிக்கிழமை  திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.