திங்கள், 6 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: வியாழன், 5 செப்டம்பர் 2019 (13:02 IST)

ஜிவி பிரகாஷ் உள்ளே, தனுஷ் வெளியே: நாளைய ரிலீசில் திடீர் திருப்பம்

ஒவ்வொரு வாரம் வெள்ளிக்கிழமை மூன்று அல்லது நான்கு தமிழ்ப்படங்கள் ரிலீசாகி வரும் நிலையில் இந்த வார வெள்ளியன்று தனுஷின் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’, ஆர்யாவின் ‘மகாமுனி’, ஜிவி பிரகாஷின் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ மற்றும் யோகிபாபுவின் ‘ஜாம்பி’ ஆகிய திரைப்படங்கள் வெளியாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டன.
 
 
ஆனால் போதுமான திரையரங்குகள் கிடைக்காததால் ஜிவி பிரகாஷின் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ திரைப்படம் இரண்டு வாரம் தள்ளி வைக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ படத்தின் மீது பதிவு செய்யப்பட்ட ஒரு வழக்கில் இன்றைய விசாரணையில் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு காரணமாக இந்த படம் நாளை வெளியாக வாய்ப்பு இல்லை என்று செய்திகள் வெளிவந்துள்ளது
 
 
எனவே தனுஷின் படம் நாளைய ரிலீசில் இருந்து வெளியேறியதால் ஜிவி பிரகாஷின் ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ திரைப்படம் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை ஜிவி பிரகாஷூம் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். இன்று முழுவதும் அதிரடியாக புரமோஷன் செய்து நாளை இந்த படம் ரிலீஸ் என்பதை மக்களிடம் கொண்டு செல்லவும் படக்குழுவினர் களத்தில் இறங்கியுள்ளனர்.