செவ்வாய், 3 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 9 பிப்ரவரி 2021 (23:34 IST)

’’வலிமை ’’படத்தில் அஜித்குமாரின் புகைப்படம் வைரல் !!

நடிகர் அஜித்குமார் நடித்துவரும் வலிமை படத்தின் ஒரு புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த ஆண்டில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள படம் அஜித்குமார் நடிப்பில் உருவாகி வரும் வலிமை. இப்படத்தை தீரன் அதிகாரம் 1,நேர்கொண்ட பார்வை,போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் ஹெச்.வினோத் இயக்கி வருகிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் தயாரிக்கிறார். ஆனால் படம் ஆரம்பிக்கப்பட்டு ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாகியும் படத்தின் டைட்டில் போஸ்டர் கூட இன்னும் படத்தயாரிப்பாளரால் வெளியிடப்படவில்லை. ஆனால் அவர் தயாரிக்கும் மற்ற படங்களுக்கான வேலைகள் மட்டும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் கோயிலுக்கு செல்லும் போது வலிமை அப்டேட் கேட்டு வேண்டிக்கொள்வது, போஸ்டர் அடித்து போனி கபூரிடம் வலிமை அப்டெட் கேட்பது என அஜித் ரசிகர்கள் ஆர்வமாக இருந்து வருகின்றனர். இந்நிலையில் டிக்டாக்கில் பிரபலமாக இருக்கும் ஜி பி முத்துவின் வீடியோக்களின் கமெண்ட் செக்‌ஷனில் சென்று வலிமை அப்டேட் கேட்டு நச்சரித்தனர்.

இந்நிலையில் வலிமை படத்தில் அஜித்குமார் குடும்பத்தினருடன்  இணைந்து எடுத்துக்கொண்டு புகைப்படம் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில்  வைரலாகிவருகிறது.

மேலும் வரும் மே மாதம் 1 ஆம் தேதி அஜித்குமாரின் பிறந்தநாள் அன்று வலிமை படத்தை திரைக்குக் கொண்டுவரும் முயற்சியில் படக்குழுவினர் தீவிரமாக பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.