முடிவுக்கு வந்த துக்ளக் தர்பார் படப்பிரச்சனை!
விஜய் சேதுபதி நடித்துள்ள துக்ளக் தர்பார் படத்தை ஹாட்ஸ்டார் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக கைப்பற்றியுள்ளது.
மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மற்றும் பார்த்திபன் இருவரும் 'துக்ளக் தர்பார்' என்ற படத்தில் நடித்து வருகின்றனர் . இந்தப்படத்தை டெல்லி பிரசாத் தீனதயாள் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக மஞ்சிமா மோகன் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலிஸூக்கு தயாராகி வருகிறது.
இந்த படத்தை மொத்தம் 28 கோடி ரூபாய்க்கு கைப்பற்றியது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் நிறுவனம். ஆனால் தொலைக்காட்சி உரிமையையும் சேர்த்தே கேட்டதாம். ஆனால் முன்னதாகவே அதை சன் தொலைக்காட்சி நிறுவனம் கைப்பற்றி விட்டதாம். அவர்களை அனுகி தயாரிப்பு நிறுவனம் திருப்பிக் கேட்ட போது அதைக் கொடுக்க மறுத்ததாம். அதனால் இப்போது சாட்டிலைட் ரைட்ஸ் போக மீதியை மட்டும் ஹாட்ஸ்டார் நிறுவனம் வாங்க முடிவு செய்துள்ளதாம்.