திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 24 மார்ச் 2021 (15:55 IST)

துக்ளக் தர்பார் படத்தில் சத்யராஜ்… சஸ்பென்ஸ் கதாபாத்திரம்!

விஜய் சேதுபதி நடித்துள்ள துக்ளக் தர்பார் படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்துள்ளாராம்.

மக்கள் செல்வன் விஜய்சேதுபதி மற்றும் பார்த்திபன் இருவரும் 'துக்ளக் தர்பார்' என்ற படத்தில் நடித்து வருகின்றனர் . இந்தப்படத்தை டெல்லி பிரசாத் தீனதயாள் என்பவர் இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு ஜோடியாக அதிதிராவ் ஹைத்ரி ஒப்பந்தம் செய்யப்பட்டு நடித்து வந்தார். ஆனால், கொரோனா ஊரடங்கினால் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டதால் நடிகை அதிதிராவ்விற்கு கால்ஷீட் பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அந்த கதாபாத்திரத்தில் மஞ்சிமா மோகன் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலிஸூக்கு தயாராகி வருகிறது.

இந்நிலையில் இந்த படத்தில் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்துள்ளாராம். அவரின் கதாபாத்திரம் என்ன என்பதை படக்குழு ரகசியமாக வைத்துள்ளதாம்.