வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : புதன், 28 ஆகஸ்ட் 2024 (17:05 IST)

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிப்பு.! ஜனாதிபதி திரவுபதி முர்மு..!!

Murmu President
பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.
 
பிடிஐ செய்தி நிறுவனத்திற்காக அவர் எழுதிய கட்டுரையில், கொல்கத்தா பெண் மருத்துவர்  பலாத்காரம் செய்து படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்துகிறது என்று கூறியுள்ளார். 

நீதி கேட்டு மக்கள் போராடும் நிலையில், குற்றவாளிகள் சுதந்திரமாக நடமாடுகின்றனர் என்றும் பெண்களுக்கு எதிராக இதுவரை நடந்த குற்றங்களே போதும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

மேலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக, சமூகம் நேர்மையாகவும், பாரபட்சமின்றியும் சுயபரிசோதனை செய்வது அவசியம் என்று திரவுபதி முர்மு குறிப்பிட்டுள்ளார். 

பயத்தில் இருந்து பெண்கள் விடுதலை பெறுவதற்கான பாதையில் உள்ள தடைகளை நீக்குவதற்கு நாம் கடமைப்பட்டு உள்ளோம் என்றும் நிர்பயா சம்பவத்திற்கு பிறகு ஏராளமான பலாத்கார சம்பவங்களை இந்த சமூகம் மறந்துவிட்டது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

இந்த ‛ செலக்டிவ் அம்னீசியா' கொடூரமானது என குறிப்பிட்டுள்ள அவர், உண்மையை ஏற்றுக் கொள்ள வரலாற்றை எதிர்கொள்ள பயந்த சமூகங்கள், செலக்டிவ் அம்னீசியாவை நாடுகின்றன என்று கூறியுள்ளார்.


தேசம் விழித்துக் கொண்டு, பெண்களுக்கு எதிரான குற்றங்களுக்கு முடிவு கட்ட வேண்டும் என்று குடியரசு தலைவர் திரவுபதி முர்மு தெரிவித்துள்ளார்.