ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Siva
Last Updated : புதன், 28 ஆகஸ்ட் 2024 (14:49 IST)

பாலியல் குற்றவாளிகளுக்கு 10 நாட்களில் மரண தண்டனை: மம்தாவின் புதிய சட்டம்..!

பாலியல் வன்கொடுமை குற்றவாளிகளுக்கு தூக்குத் தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வரப்படும் என்றும், 10 நாட்களில் மரண தண்டனை கிடைக்கும் வகையில் சட்டம்  இயற்றப்படும் என்றும் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி உறுதி அளித்துள்ளார்.

அடுத்த வாரம் கூடும் மேற்கு வங்க மாநில சட்டப்பேரவை கூட்டத்தொடரில் மாநில சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்படும் என்று கூறிய முதல்வர் மம்தா பானர்ஜி, போராடி வரும் மருத்துவர்கள் தங்களது போராட்டத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தார். மேலும் போராடி வரும் மருத்துவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாது என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

மேற்கு வங்கத்தில் பாஜக சார்பில் இன்று பந்த் நடைபெறும் நிலையில் மம்தா பானர்ஜி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேற்கு வங்க மாநிலத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் மருத்துவ மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி நிலையில் இந்த வழக்கை சிபிஐ தற்போது நடத்தி வருகிறது. இந்த வழக்கில் சஞ்சய் ராய் உள்பட ஒரு சிலர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் சில கைது நடவடிக்கை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Edited by Siva