மாஸ்டர் படத்தில் நடிக்க விஜய் எப்படி ஒப்புக்கொண்டார் ? ஷாக்கான டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ரவீனா !
தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கிய 'மாஸ்டர்' திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து விட்டது. விஜய்க்கு வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ள இப்படத்தில் ஆண்ட்ரியா, மாளவிகா மோகனன், ஷாந்தனு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
ராக்ஸ்டார் அனிருத் இசையமைத்திருக்கும் இப்பாடல்கள் அமரோக வரவேற்பை பெற்றுள்ளது. ஆடியோ லான்சிற்கு பிறகு படத்தின் ட்ரைலர் மற்றும் டீஸருக்காக வெறித்தனமாக காத்திருக்கும் ரசிகர்களை கொரோனா வைரஸ் வந்து ஆப் பண்ணிவிட்டது. இதையடுத்து படத்தின் ரிலீஸ் தேதியும் தள்ளி சென்று விஜய் பிறந்த நாளான ஜூன் 22ம் தேதி மாஸ்டர் வெளியாகும் என நம்பகுந்த வட்டாரத்தில் செய்திகள் வெளிவந்தது.
இந்நிலையில் தற்போது மாஸ்டர் படத்தின் கதாநாயகி மாளவிகா மோகனனுக்கு குரல் கொடுத்த டப்பிங் ஆர்ட்டிஸ்ட் ரவீனா ரவி பிரபல நாளிதழ் ஒன்றிற்கு பிரத்யேக பேட்டி கொடுத்துள்ளார். அதில் பேசியுள்ள அவர், "மாஸ்டர் படம் விஜய்யின் கமர்சியல் மசாலா படங்களை போல இல்லை. இந்த படத்தில் சில சீன்களை பார்த்து விஜய் எப்படி இதில் நடிக்க ஒத்துக்கொண்டார் என்று யோசித்தேன்" என்று தெரிவித்துள்ளார்.