வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: சனி, 5 செப்டம்பர் 2020 (16:20 IST)

சுஷாந்திற்கு போதை பொருள் சப்ளை.... ரியாவின் சகோதரர் வாக்குமூலம்

சமீபத்தில் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டார். இவரது இறப்புக்கு வாரிசு அரசியல் காரணம் என்று கூறி பலரும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சுஷாந்தின் காதலி ரியா மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்நிலையில்,  சகோதரி கூறியதால் சுஷாந்திற்காக போதைப் பொருள் வாங்கியதாக ரியாவின் சக்ரபர்தியின் சகோதரர் போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் சூடு பிடித்ததை அடுத்து,  போதைப் பொருள் தடுப்புப் பிரிவினர் ரியாவின் சகோதரர் சௌவிக் மற்றும் சுஷாந்தின் மேலாளரை கைது செய்தனர்.

அவர்களிடம் மேற்கொண்ட விசாரணையில்  போதைப்பொருளை சுஷாந்திற்க்காக வாங்க ரியா கூறியதாக சௌவிக் தெரிவித்துள்ளார்.