செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 22 ஆகஸ்ட் 2020 (11:51 IST)

சோனாக்‌ஷி சின்ஹாவை ஆபாசமாக விமர்சனம் செய்த ரசிகர் கைது! மும்பை போலிஸ் அதிரடி நடவடிக்கை!

பாலிவுட் நடிகையும் மூத்த நடிகர் சத்ருஷன் சின்ஹாவின் மகளுமான சோனாக்‌ஷி சின்ஹாவை ஆபாசமாகப் பேசிய நபரைப் போலிஸார் கைது செய்துள்ளனர்.

ஜூன் மாதம் தற்கொலை செய்து கொண்ட இளம் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புட்டின் தற்கொலைக்குக் காரணம் பாலிவுட்டில் இருக்கும் ஸ்டார்கிட் நடிகர்கள் அவரை ஒதுக்கி மன அழுத்தத்துக்கு ஆளாக்கியதுதான் காரணம் என சொல்லப்படுகிறது. இதனால் ரசிகர்கள் ஆலியா பட, கரண் ஜோஹர், சோனாக்‌ஷி சின்ஹா உள்ளிட்ட ஸ்டார்கிட்ஸ்களின் மேல் கோபமாக உள்ளனர்.

இந்நிலையில் சோனாக்‌ஷி சின்ஹாவை சமூகவலைதளத்தில் ஒரு நபர் சுஷாந்த் மரணம் தொடர்பாக ஆபாசமாக விமர்சனம் செய்ய அவர் குறித்து போலிஸில் புகாரளித்தார் சோனாக்‌ஷி. அதையடுத்து 27 வயதான அந்த நபரை போலிஸார் கைது செய்துள்ளனர்.