வியாழன், 9 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 15 செப்டம்பர் 2020 (23:45 IST)

மலையாள சினிமாவில் போதைப்பொருள் .. கீர்த்தி சுரேஷின் தந்தை புகார்... நடிகர்கள் அதிர்ச்சி !

சுஷாந்த் மரணத்தைத் தொடர்ந்து அவரது காதலி ரியா சக்கரவர்த்தி உள்ளிட்ட சிலர் போதைத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டனர்.

இதேபோல் கன்னட திரையுலகில் முன்னணி நடிகை ராகினி திவேதி, சஞ்சனா கல்ராணி ஆகியோர் போதைப் பொருள் பயன்படுத்தியதாகக் கைது செய்யப்பட்டனர்.

இதுகுறித்து பல சினிமா பிரபலங்களிடம் விசாரணை நடைபெற்று வருவருவதாக தகவல்கள் வெளியானது.

இந்நிலையில் இதுகுறித்து நடிகை கீர்த்தி சுரேஷின் தந்தையும் மலையாள சினிமா தயாரிப்பாளருமான சுரேஷ்குமார் கூறியுள்ளதாவது : மலையாள திரைபட உலகிலும் போதைப் பொருள் பயன்பாடு அதிகரித்துள்ளது.  கேரவனுக்குள் செல்லமுடியவில்லை என்று சில பணியாளர்கள் எங்களிடம் கூறியதுண்டு…மேலும் இங்கு பார்ட்டி கலாச்சாரம் உருவானது. ஆனால் நாங்கள் நடவடிக்கை எடுத்தபின் இல்லை ஆனால் போதைக் புழக்கம் உள்ளது என தெரிவித்துள்ளார்.

இதனால் மலையாள சினிமாவில்  பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.