திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: திங்கள், 7 செப்டம்பர் 2020 (17:43 IST)

போதைப் பொருள் வழக்கு...மேலும் 5 நாள் காவலில் எடுத்த போலீஸார் !

கன்னட சினிமாத்துறையினருக்கு போதைபொருள்களை அளித்து வந்த லோம் பெப்பர் சாமா என்பவரை மத்திய குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்து விசாரித்தனர்.

இவர் ஆப்பிரிக்க நாட்டைச் சேர்ந்தவர் என்பதால் இங்கு எப்படி யார் மூலம் போதைப் பொருள் கடத்துகிறார் என்று போலீஸாரிடம் தெரிவித்துள்ளார்.

இதனைத்தொடர்ந்து பெங்களூரில் போதைப் பொருள் கும்பலிடம் நெருங்கிய தொடர்பு வைத்திருந்த ராகினிதிரிவேதி மீது மத்திய குற்றப் பிரிவு போலீஸார் கைது செய்தனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள  நடிகை ராகினியை குற்றப்பிரிவு போலீஸார் மேலும் 5 நாட்கள்  காவலில் எடுத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் மட்டும் இந்த ஒரு வாரத்தில் போதைப் பொருள் கடத்தல் தொடர்பாக 28 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.