புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Updated : வெள்ளி, 29 மார்ச் 2019 (15:09 IST)

முதல் பாலிவுட் படத்திலேயே இரட்டை வேடம்... அசத்தும் கீர்த்தி சுரேஷ்

அஜய் தேவ்கான் நடிக்கும் பாலிவுட் படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ், இரட்டை வேடங்களில் கலக்க இருக்கிறார். 

கடந்த 1956ம் ஆண்டு சிட்னி ஒலிம்பிக் போட்டியில் இந்திய கால்பந்து அணியின் சிறப்பான செயல்பாட்டில் முக்கிய பங்கு வகித்தவர் சையது அப்துல் இப்ராஹிம். இந்தியக் கால்பந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் சையது அப்துல் இப்ராஹிமின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு பாலிவுட் இயக்குனர் அமித் ஷர்மா புதிய படம் ஒன்றை இயக்குகிறார். இதில், அஜய் தேவ்கான் ஹீரோவாக நடிக்கிறார். ஹீரோயினாக நடிக்க கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறார்.
 
இதில், மிக இளவயது தோற்றம் மற்றும் கொஞ்சம் வயதான தோற்றம் என இருவேறு தோற்றங்களில் கீர்த்தி சுரேஷ் நடிக்க இருக்கிறார். நடிகையர் திலகம் படம் போலல்லாமல் பிராஸ்தெடிக் மேக்கப் இல்லாமல், தனது நடிப்பின் மூலமே வயதான தோற்றத்தைக் கொண்டுவர கீர்த்தி முடிவெடுத்திருக்கிறார். அவருக்கு இதுதான் முதல் பாலிவுட் படம் என்பது குறிப்பிடத்தக்கது.