பாலிவுட்டில் கீர்த்தி சுரேஷ்! யாருக்கு ஜோடி தெரியுமா?

VM| Last Updated: புதன், 13 மார்ச் 2019 (17:20 IST)
கடந்த சில ஆண்டுகளாக தனது நடிப்பாலும், பக்கத்து வீட்டு பெண் போன்ற அழகாலும்  ரசிகர்களை  வெகுவாக கவர்ந்துவிட்டார் கீர்த்தி சுரேஷ். தமிழில் விஜய், விக்ரம், சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன் என தமிழில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர், தெலுங்கில் மகாநதி(நடிகையர் திலகம்) படம் மூலம் பிரபலமானார்.


 
அடுத்து பாலிவுட்டில் நடிக்கப்போகிறார். இன்னும் படத்துக்கு பெயர் வைக்கப்படவில்லை. அமித் சர்மா இயக்கும் படத்தில் அஜய் தேவ்கானுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு வரும் மே மாதம் தொடங்க உள்ளது.
 
இந்திய கால்பந்து அணி பயிற்சியாளர் சையத் அப்துல் ரஹீமின் வாழ்க்கையை தழுவி படம் எடுககப்பட உள்ளது. சையத் அப்துல் ரஹீமின் தலைமையிலான இந்திய அணி 1956ம் ஆண்டு மெல்போர்ன் ஒலிம்பிக்கில்  இந்திய கால்பந்து அணி அரையிறுதி வரை சென்றது. அஜய் தேவ்கான் சையத் வேடத்தில் நடிக்க உள்ளார். இதில் அஜய் தேவ்கானுக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ளார். ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் இப்படத்தை தயாரிக்க உள்ளதாக கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :