என் படம் பாகிஸ்தானில் ரிலீஸ் ஆகாது : அஜய் தேவ்கான் அதிரடி

VM| Last Modified திங்கள், 18 பிப்ரவரி 2019 (15:15 IST)
தான் நடித்துள்ள டோட்டல் தமால் படம் பாகிஸ்தானில் வெளியாகாது என  அஜய் தேவ்கான் அறிவித்துள்ளார்.


 
ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமா மாவட்டத்தில்  பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் சிஆர்பிஎப் வீரர்கள் 40  பேர் உயிரிழந்தனர். இதையடுத்து அஜய் தேவ்கான் இப்போது உள்ள சூழலில் தனது   டோட்டல் தமால் படம்  பாகிஸ்தானில் வெளியாவது சரியான ஒன்றாக இருக்காது என்பதால் அங்கு வெளியாகாது என்றார்.
 
அஜய் தேவ்கான், மாதுரி தீட்சித், அணில் கபூர், ரிதீஷ் தேஷ்முக் உள்பட பலர் நடித்துள்ள டோட்டல் தமால் படம் வரும் 22ம் தேதி வெளியாகிறது. 
 
உயிரிழந்த வீரர்கள் குடும்பத்தினருக்காக ரூ.50 லட்சம் நிதியுதவி வழங்குவதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.


இதில் மேலும் படிக்கவும் :