1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By J.Durai
Last Modified: வியாழன், 1 ஆகஸ்ட் 2024 (09:42 IST)

'டபுள் ஐஸ்மார்ட்' படத்தின் மாஸ் டிரெய்லர் ஆகஸ்ட் 4 அன்று வெளியாகிறது!

'டபுள் ஐஸ்மார்ட்' படத்தின் ஒவ்வொரு புதிய அப்டேட்டும் ரசிகர்களின் எதிர்பார்ப்பை இருமடங்கு அதிகமாக்கி வருகிறது. பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் உஸ்தாத் ராம் பொதினேனி கதாநாயாகனாக நடித்திருக்க, நடிகர் சஞ்சய் தத் எதிர்கதாநாயகனாக நடித்துள்ளது படத்திற்கு மேலும் வலு சேர்த்துள்ளது. 
 
இப்போது, 'டபுள் ஐஸ்மார்ட்' படத்திற்கான தியேட்டர் டிரெய்லர் ஆகஸ்ட் 4 ஆம் தேதி வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அறிவித்துள்ளனர். டிரெய்லர் போஸ்டரில் ராம் பொதினேனி முரட்டுத்தனமான மாஸ் லுக்கில் உள்ளார். கழுத்தில் கட்டியுள்ள கர்சீஃப் அவரது ஸ்டைலிஷ் லுக்கை இன்னும் வசீகரமாக்கியுள்ளது.
 
பூரி கனெக்ட்ஸ் பேனரின் கீழ் பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோரால் தயாரிக்கப்பட்ட இந்த பான் இந்தியா திரைப்படத்தில் சஞ்சய் தத் வில்லனாக நடித்துள்ளார்.
 
சாம் கே நாயுடு மற்றும் கியானி கியானெலி ஆகியோர் படத்திற்கு அற்புதமான ஒளிப்பதிவு செய்துள்ளனர். 'டபுள் ஐஸ்மார்ட்' திரைப்படம் ஆகஸ்ட் 15 ஆம் தேதி சுதந்திர தினத்தன்று உலகெங்கிலும் உள்ள திரையரங்குகளில் தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகிறது.