வெள்ளி, 8 நவம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: ஞாயிறு, 12 செப்டம்பர் 2021 (11:03 IST)

டாக்டர் படம் வித்தியாசமான அனுபவமாக இருக்கும்… தயாரிப்பாளர் கருத்து!

டாக்டர் படம் திரையரங்கில் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என தயாரிப்பாளர் கே ஜே ஆர் ராஜேஷ் தெரிவித்துள்ளார்.

நடிகர் சிவகார்த்திகேயனின் ‘டாக்டர்’ திரைப்படம் ஓடிடியில் ரிலீசாக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியானது என்பதை பார்த்தோம். ஆனால் படத்தின் நாயகன் சிவகார்த்திகேயன் படம் திரையரங்கில் வெளியாவதையே விரும்புகிறார் என்றும் சொல்லப்பட்டது. இந்நிலையில் இன்று காலை இந்த படம் ஹாட்ஸ்டார் ஓடிடியில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி ரிலீஸாகும் என்று செய்திகள் சமூகவலைதளங்களில் பரவின.

ஆனால் அதையெல்லாம் தயாரிப்பாளர் மறுத்தார். இந்நிலையில் இப்போது திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளோடு இயங்கலாம் என அறிவிக்கப்பட்டு விட்டன. ஆனாலும் டாக்டர் படத்தின் ரிலிஸ் பற்றிய எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. இந்நிலையில் இப்போது டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாக வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. பொருத்தமான ஒரு பண்டிகை நாளில் ரிலீஸ் செய்ய பேச்சுவார்த்தை நடப்பதாக சொல்லப்படுகிறது.

ஆனால் இப்போது திரையரங்குகள் திறக்கப்பட்டு விட்ட நிலையில் திரையரங்குகளில் வெளியாக அதிக வாய்ப்புள்ளது என சொல்லப்படுகிறது. இதுகுறித்து பேசியுள்ள தயாரிப்பாளர் கே ஜே ஆர் ராஜேஷ் ‘இந்த படத்தை உருவாக்கும் போதே இதை பெரிய திரையில்தான் கொண்டுவரவேண்டும் என நினைத்தோம். ஆனால் கோவிட் நெருக்கடி வெளியீட்டு திட்டங்களை மாற்றிவிட்டது. இதுபோன்ற வித்தியாசமான ப்ளாக் காமெடி படம் திரையரங்கில் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவமாக இருக்கும். விரைவில் திரையரங்குகளில் கொண்டுவருவோம்’ எனக் கூறியுள்ளார்.