ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Senthil Velan
Last Updated : வெள்ளி, 6 செப்டம்பர் 2024 (17:30 IST)

விஜய்யின் GOAT திரைப்படம் முதல் நாளில் எத்தனை கோடி தெரியுமா.? அதிகாரப்பூர்வ அறிவிப்பு..!

Goat Movie
விஜய்யின் 'தி கோட்’ திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் ரூ. 126. 32 கோடி வசூலித்துள்ளதாக ஏஜிஎஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
 
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவான ‘தி கோட்’ திரைப்படம் நேற்று (செப்டம்பர் 5) உலகெங்கிலும் திரையரங்குகளில் வெளியானது.  கேரளா மற்றும் கர்நாடகாவில் சிறப்பு காட்சி காலை 4 மணிக்கே திரையிடப்பட்டது, தமிழகத்தில் சிறப்பு காட்சி காலை 9 மணிக்கு திரையிடப்பட்டது. 

‘தி கோட்’ படத்தின் ரிலீஸை விஜய் ரசிகர்கள் ஆடல், பாடல், பட்டாசு, பாலபிஷேகம் என திருவிழா போல கொண்டாடித் தீர்த்தனர். தமிழகத்தில் மட்டும் மொத்தம் 1,100 திரையரங்குகளில் விஜயின் ‘தி கோட்’ வெளியானது. மேலும் தமிழ், இந்தி, தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் என 5 மொழிகளில் படம் வெளியானது.

இன்னும் மூன்று நாட்களுக்கான படத்தின் டிக்கெட்டுகள் மொத்தமாக விற்றுத் தீர்ந்தது.  படத்தைப் பார்த்த ரசிகர்கள் பலரும் வெங்கட் பிரபு தரமான சம்பவம் செய்துள்ளார் என்று கொண்டாடி வருகின்றனர். மேலும் ரசிகர்களின் வருகையால் திரையரங்குகள் நிரம்பி வழிகிறது.

 
இந்நிலையில் 'தி கோட்’ திரைப்படம் உலகம் முழுவதும் முதல் நாளில் ரூ. 126. 32 கோடி வசூலித்துள்ளதாக ஏஜிஎஸ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.