ராயன் படத்தின் முதல் நாள் வசூல் எவ்வளவு?... வெளியான தகவல்!
நடிகர் தனுஷ் நடித்து, இயக்கியுள்ள அவரின் 50 ஆவது படமான ராயன்இன்று வெளியாகியுள்ள நிலையில் படத்திற்கு கலவையான விமர்சனங்கள் வரத்தொடங்கியுள்ளன. படத்தில் தனுஷோடு சந்தீப் கிஷன், காளிதாஸ் ஜெயராம், எஸ் ஜே சூர்யா மற்றும் துஷாரா விஜயன் ஆகியோர் நடித்துள்ளனர்.
படம் வெளியாகி முதல் நாள் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. ஆனாலும் படத்துக்கு எதிர்மறையான விமர்சனங்கள் இப்போது வரத்தொடங்கியுள்ளன. இந்நிலையில் ராயன் படம் உலகளவில் முதல் நாளில் 12.5 கோடி ரூபாய் அளவுக்கு வசூல் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எதிர்மறை விமர்சனங்களால் வசூல் குறையுமா அல்லது இப்படியே நிலையாக செல்லுமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து ப்ளாப் படங்களாக வெளியாகி வந்த நிலையில் கருடன், மகாராஜா போன்ற வெற்றிப் பட வரிசையில் கர்ணன் சேருமா என்ற கேள்வி எழுந்துள்ளது.