ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 22 ஜூன் 2024 (07:52 IST)

துப்பாக்கி, போக்கிரி ரி ரிலீஸில் முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

சமீபத்தில் விஜய்யின் கில்லி திரைப்படம் ரி ரிலீஸ் ஆகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. படம் கிட்டத்தட்ட 300க்கும் மேற்பட்ட திரைகளில் ரி ரிலீஸ் செய்யப்பட்டு 20 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்துள்ளதாக சொல்லப்படுகிறது. ரி ரிலீஸில் ஒரு படம் இவ்வளவு தொகை வசூலித்திருப்பது இதுவே முதல் முறை.

இதையடுத்து விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு அடுத்தடுத்து பல படங்கள் ரி ரிலீஸாகின.  போக்கிரி மற்றும் துப்பாக்கி ஆகிய படங்கள் நேற்று ரிலீஸ் ஆகின. இதில் துப்பாக்கி திரைப்படத்துக்கு மிகப்பெரிய அளவில் எதிர்பார்ப்பு இருந்தது. சென்னையின் முக்கியத் திரையரங்குகளில் ஒன்றான வடபழனியில் உள்ள கமலா திரையரங்கில் அந்த படத்துக்கான அனைத்து டிக்கெட்களும் விற்றுத் தீர்ந்துள்ளதாக திரையரங்க நிர்வாகம் அறிவித்திருந்தது. 

இந்நிலையில் நேற்று இரு படங்களும் ரிலீஸான நிலையில் முதல் நாளில் துப்பாக்கி 32 லட்ச ரூபாயும், போக்கி 28 லட்ச ரூபாயும் வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.