1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: புதன், 2 ஜனவரி 2019 (20:06 IST)

ஶ்ரீதேவியின் அழகு மகள்கள் புத்தாண்டு கொண்டாடியது இங்குதான்!

16 வயதினிலே படத்தில் மயில் கேரக்டரில் நடித்த ஶ்ரீதேவி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் என எல்லா மொழி ரசிகர்களாலும் கொண்டாடப்பட்டவர். 



இவர் கடந்த ஆண்டு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். ஶ்ரீதேவிக்கு குஷி,  ஜான்வி என்ற இரு மகள்கள் உள்ளனர். இதில் ஜான்வி தடக் படத்தின் மூலம் ஹீரோயினாகிவிட்டார்.  இதனால் பாலிவுட்டில் ஹாட் டாபிக்காக அடிக்கடி பேசப்படுகிறார் ஜான்வி. 
 
அவரின் தங்கை குஷியும் விரைவில் நடிக்கவுள்ளாராம். மேலும் இவர்களின் தந்தை போனி கபூர் அஜித் நடிக்கும் அடுத்த படத்தை  தயாரிக்க உள்ளார். 
 
இந்நிலையில் 2019 புத்தாண்டான நேற்று மூவரும் திருப்பதி சென்று ஏழுமலையான கோவிலில் சுவாமி தரிசனம் செய்துள்ளனர். இந்த புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.