முதல் முதலாக இரண்டு வேடங்களில் நயன்தாரா!

VM| Last Updated: செவ்வாய், 8 ஜனவரி 2019 (13:04 IST)
தென்னிந்திய சினிமாவின் லேடி சூப்பர் ஸ்டார் என செல்லமாக அழைக்கப்படும் நயன்தாரா சுமார் ஆறு கோடி ரூபாய் சம்பளம் வாங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.தென்னிந்தியாவிலேயே நயன்தாரா அளவுக்கு எந்த நடிகையும் சம்பளம் வாங்கவில்லை . இருப்பினும் கோடிகளை கொட்டி கொடுத்து நயன்தாராவை தங்கள் படங்களில் நடிக்க வைக்க தயாரிப்பாளர்கள் காத்துக்கிடக்கிறார்கள். ஆனால் நயன்தாராவோ குறிப்பிட்ட கதைகளை மட்டும் தேர்வு செய்து நடித்து வருகிறார்.
 
தற்போது அஜீத்துடன் விஸ்வாசம் படத்தில் நடித்து முடித்துள்ளார் . இந்தப் படம் நாளை மறுதினம் உலகம் முழுவதும் வெளியாகிறது. 
 இந்நிலையில் நயன்தாரா  முதல் முறையாக இரண்டு வேடங்களில் ஐரா படத்தில் நடித்துள்ளார்.  இதுதொடர்பாக இப்படத்தை இயக்கி வரும் கே.எம். சர்ஜுன் கூறும்போது, 'ஐரா என்றால் யானை என்று அர்த்தம். இது ஒரு சூப்பர் நேச்சுரல் திகில் படம். நயன்தாராவுக்கு இது ஒரு சிறந்த படமாக இருக்கும். அந்த நம்பிக்கையுடன் நயன்தாரா இரவு பகலாக கடுமையாக உழைத்துள்ளார். அவருடன் கலையரசன், யோகி பாபு, ஜெயப்பிரகாஷ், ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்கள். கதை மற்றும் திரைக்கதையை பிரியங்கா ரவீந்திரன் எழுதி இருக்கிறார் 'என்றார்.


இதில் மேலும் படிக்கவும் :