திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha
Last Updated : வெள்ளி, 4 அக்டோபர் 2019 (18:15 IST)

அசுரன் கொடுத்த கிரீடம் - இளைய சூப்பர் ஸ்டார் ஆனார் தனுஷ் -

பொல்லாதவன், ஆடுகளம், வட சென்னை என தமிழ் சினிமாவின்  மிகச்சிறந்த படங்களை இயக்கிய வெற்றிமாறன் தற்போது தனுஷை வைத்து வித்யாசமான படத்தை இயக்கி ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஏங்க வைத்துள்ளார். தனுஷுக்கு ஜோடியாக மலையாள லேடி சூப்பர் மஞ்சு வாரியர் நடித்துள்ளார். இரண்டு சிறந்த நடிப்பு ஜாம்பவான்களால் உருவாகியுள்ள அசுரன் படம் மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கிடையில் இன்று திரைக்கு வந்து நல்ல விமர்சனங்களை பெற்று வருகிறது.


 
அண்மையில் வெளியான படத்தின் பர்ஸ்ட் லுக், ட்ரைலர் , டீசர் , சிங்கிள் டிராக் என அனைத்தும் ரசிகர்களிடையே அமோக வரவேப்பை பெற்று படம் வெளியாவதற்கு முன்னதாகவே வெற்றியை நிலை நிறுத்தியது. தனுஷ்- வெற்றிமாறன் கூட்டணி இணைந்தால் தோல்வியே கிடையாது என்பதை மீண்டும் ஒரு முறை நிரூபித்து விட்டது அசுரன். அசுரன் படத்தில் சிவ சாமியாக நடித்துள்ள தனுஷ் அந்த கதாபாத்திரமாகவே வாழ்ந்துள்ளார். 
 
இந்நிலையில் தற்போது சொல்லவரும் தகவலென்னவென்றால்,  அசுரன் படத்தில் தனுஷிற்கு இளைய சூப்பர் ஸ்டார் என்று பட்டம்  வழங்கப்பட்டுள்ளதை புகைப்படத்துடன் வெளியிட்டு  "கடின உழைப்பு ஒருபோதும் தவறுவதில்லை" என்று கூறி தனுஷ் ரசிகர்கள் வெளியிட்டு வைரலாக்கி வருகின்றனர். 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Hard work never fail