1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 23 மார்ச் 2021 (19:11 IST)

'கர்ணன்' பட டீசர் குறித்து எச்சரிக்கை விடுத்த இயக்குநர் !

நடிகர் தனுஷ் நடித்துள்ள கர்ணன் பட டீசர் குறித்து பிரபல இயக்குநர் ஒருவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கர்ணன்.

இப்படத்தை எஸ்.தாணு தயாரித்துள்ளார். இப்படத்தில் கண்டா வரச்சொல்லுங்க, பண்டாரத்தி புராணம், திரெளபதி முத்தம் ஆகிய பாடல்கள் வெளியாகி வைரலானது.

இந்நிலையில், இப்படத்தின் டீசர் இரவு 7.01 மணிக்கு வெளியாகும் என தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.

பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இப்படம் ஏப்ரல் மாதம் 9 ஆம் தேதி ரிலீசாகவுள்ளது.
இந்நிலையில் இப்படத்தின் டீசர் குறித்து திருடா திருடி, சீடன் உள்ளிட்ட படங்களின் இயக்குநர் சுப்பிரமணிய சிவா எச்சரித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது சமூகவலைதளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

எச்சரிக்கையாக இருங்கள்! நேற்றும் #KarnanTeaser பார்த்தேன். குலை நடுங்க வைக்கிறார்
@mari_selvaraj

. தனுஷ் என்ற அசுரன் எதிரியாக நினைப்பவர்களும் கொண்டாடிதான் ஆக வேண்டும் என திரும்பவும் வாய்ப்பு ஏற்படுத்தி கொடுத்து, முடிவில் பயத்தையும் பதட்டத்தையும் தந்தும் அனுப்புகிறார் கர்ணனாக! எனத் தெரிவித்துள்ளார்.