ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: செவ்வாய், 27 ஏப்ரல் 2021 (13:44 IST)

இயக்குனர் தாமிராவின் கடைசி பதிவு: மரணத்தை முன்கூட்டியே தெரிந்து கொண்டாரா?

இயக்குனர் தாமிரா கொரோனா வைரஸ் பாதிப்பால் இன்று காலை உயிரிழந்த நிலையில் அவருடைய கடைசி ஃபேஸ்புக் பதிவு இணையதளங்களில் வைரலாகி வருகிறது. அதில் இருக்கும் கருத்தை பார்த்தால் அவர் தனது மரணத்தை முன்கூட்டியே தெரிந்து கொண்டது போல் இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட்களை பதிவு செய்து வருகின்றனர்
 
ரெட்டை சுழி, ஆண்தேவதை உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் தாமிரா இன்று காலை உயிரிழந்தார். கொரோனா வைரஸ் பாதிப்பால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தது திரையுலகினரை பெரும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது 
 
இந்த நிலையில் இயக்குனர் தாமிரா தனது பேஸ்புக்கில் ஆக்டிவாக இருப்பவர்களில் ஒருவர் என்பதும் அவர் பதிவு செய்யும் ஒவ்வொரு ஃபேஸ்புக் பதிவும் சமூக விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்பதும் குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் ஏப்ரல் 11ஆம் தேதி அவர் தனது பேஸ்புக்கில் ஒரு பதிவு செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: இந்த உலகை வெல்ல அன்பைத் தவிர வேறு சூட்சுமம் இல்லை. என்னுள் இருக்கும் தீராக் கோபங்களை இன்றோடு விட்டொழிக்கிறேன். இனி யாரோடும் பகைமுரண் இல்லை. யாவரும் கேளிர்
 
இந்த பதிவை பார்க்கும் போது அவர் தனது மரணத்தை முன்கூட்டியே தெரிந்து கொண்டு விட்டார் என்றும் அதனால்தான் அனைவரிடமும் அன்புடன் சமாதானத்துடன் செல்ல முடிவு செய்துவிட்டதாகவும் நெட்டிசன்கள் கூறிவருகின்றனர்