ஒன்றாக இணையும் மெசஞ்சர், வாட்ஸப்! – பேஸ்புக்கின் புதிய முயற்சி!
சமூக வலைதளங்களில் பிரபலமாக உள்ள பேஸ்புக் நிறுவனம் தனது மெசஞ்சர் மற்றும் வாட்ஸப் செயலிகளை இணைக்க உள்ளதாக பேசிக்கொள்ளப்படுகிறது.
உலகம் முழுவதும் தகவல் பரிமாற்ற சமூக வலைதளங்களில் முன்னனியில் உள்ளது பேஸ்புக். அதேபோல மெசேஜ் ஆப்பில் முன்னணியில் பேஸ்புக்கிற்கு சொந்தமான வாட்ஸப் நிறுவனம் உள்ளது. இந்நிலையில் முன்னதாக பேஸ்புக் நிறுவனம் தனது இன்ஸ்டாகிராம் மெசஞ்சர் சேவையயும், பேஸ்புக் மெசஞ்சர் சேவையையும் இணைக்கும் பணியை தொடங்கியது.
இந்நிலையில் தற்போது பேஸ்புக் மெசஞ்சர் மற்றும் வாட்ஸப்பை இணைக்கும் முயற்சியில் உள்ளதாக அதிகாரப்பூர்வமற்ற தகவல்கள் வெளியாகி வருகின்றன. இதன்மூலம் மூன்று செயலிகளிலும் பயனாளர்கள் தங்கள் கணக்குகளை எளிதாக நிர்வகிக்க முடிவதுடன் மற்ற பயனாளர்களுடன் உரையாடலையும் எளிதில் மேற்கொள்ள முடியும் என கூறப்படுகிறது.