ஞாயிறு, 15 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 17 மார்ச் 2018 (20:32 IST)

கமல்-விஷால் திடீர் சந்திப்பு: முடிவுக்கு வருகிறதா வேலைநிறுத்தம்

கமல்ஹாசனின் விஸ்வரூபம் 2' திரைப்படம் நேற்று சென்சார் சர்டிபிகேட் பெற்றுவிட்டதால் வெகுவிரைவில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் திரையுலகினர்களின் வேலைநிறுத்தம் தற்போது நடந்து வருவதால் ரிலீஸ் தேதி அறிவிக்க முடியாத நிலை உள்ளது.

இந்த நிலையில் இன்று விஷாலை கமல் தனது ஆழ்வார்ப்பேட்டை அலுவலகத்திற்கு அழைத்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். இதுவொரு மரியாதை நிமித்த சந்திப்பு என்று கூறப்பட்டாலும் தனது விஸ்வரூபம் 2 படத்தை ரிலீஸ் செய்யும் வகையில் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர அவர் முயற்சிப்பதாக கோலிவுட்டில் கிசுகிசுக்கப்படுகிறது.

மார்ச் 1ஆம் தேதி முதல் தயாரிப்பாளர் சங்கம் புதிய படங்களை வெளியிடுவதில்லை என்றும், பின்னர் போஸ்ட் புரடொக்சன்ஸ் உள்பட எந்தவொரு பணியும் நடக்காது என்றும், தியேட்டர் உரிமையாளர்கள் நேற்று முதல் திரையரங்குகளை மூடும் போராட்டத்தை தொடங்கிய போதிலும் கண்டுகொள்ளாத கமல், தற்போது அவருடைய படம் ரிலீசுக்கு தயாரானவுடன் வேலைநிறுத்தத்தை முடிவுக்கு கொண்டு வர முயற்சிப்பதாக கூறப்படுகிறது.