திங்கள், 23 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 17 மார்ச் 2018 (17:45 IST)

விஜய் 62 படத்தில் அறிமுகப் பாடலை பாடும் பிரபலம் யார் தெரியுமா?

விஜய் 62 படத்தின் மூலம் மூன்றாவது முறையாக இணைந்துள்ளது நடிகர் விஜய்-ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணி. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வந்த நிலையில், தற்போது ஸட்ரைக் நடைபெற்று வருவதால் படப்பிடிப்பு தடைபட்டிருக்கிறது.
'சன் பிக்சர்ஸ்' நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைக்கிறார். இந்நிலையில் படத்தில் இடம்பெறும் விஜய்க்கான அறிமுகப்  பாடலை பாலிவுட்டின் பிரபல பின்னணி பாடகரான விபின் அனேஜாவை பாட வைத்து பதிவு செய்துள்ளனர். 
 
இவர் ஏற்கெனவே ஏ.ஆர்.ரஹ்மான் இசை நிகழ்ச்சிகளில் இந்தி பாடல்களை பாடி வரும் விபின் அனேஜா, இதுவரை தமிழ்ப் பாடல்களை பாடியது கிடையாது. ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய் நடிக்கும் படத்திற்காக பாடுவதன் மூலம் தமிழில் பாடகராக அறிமுகமாகிறார் விபின் அனேஜா.