ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 8 மே 2019 (08:54 IST)

17 வயது பள்ளி மாணவி தேவை: அடல்ட் பட இயக்குனரின் விளம்பரம்

ஹர ஹர மகாதேவகி, இருட்டு அறையில் முரட்டு குத்து ஆகிய இரண்டு அடல்ட் காமெடி படங்களை இயக்கிய இயக்குனர் சந்தோஷ் ஜெயகுமார் தற்போது அரவிந்தசாமி நடிக்கவிருக்கும் ஒரு படத்தை இயக்கவுள்ளார். இந்த படத்தில் அரவிந்தசாமி ஒரு துப்பறியும் நிபுணராக நடிக்கவிருப்பதாக கூறப்படுகிறது.
 
இந்த நிலையில் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடிக்க 17 வயது பள்ளி மாணவி தேவை என்றும் விருப்பமுள்ளவர்கள் மேக்கப் இல்லாத புகைப்படத்தை அனுப்பிவிட்டு வரும் 15ஆம் தேதி நடைபெறவிருக்கும் ஆடிஷனில் கலந்து கொள்ளலாம் என்றும் இயக்குனர் சந்தோஷ் விளம்பரம் கொடுத்துள்ளார். மேலும் அழகான, கம்பீரமான தமிழ் பேசும் திறன் இருக்க வேண்டும் என்றும் தகுதியாக அவர் குறிப்பிட்டுள்ளார். 
  
அரவிந்தசாமி முக்கிய வேடத்தில் நடிக்கும் இந்த படத்தை Etcetera எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. டி.இமான் இசையில் பாலமுரளி பாலு ஒளிப்பதிவில், பிரசன்னா படத்தொகுப்பில் இந்த படம் உருவாகவுள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு அடுத்த மாதம் தொடங்கவுள்ளது.