1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Papiksha Joseph
Last Modified: சனி, 23 ஜனவரி 2021 (12:16 IST)

சின்ன தயாரிப்பாளர்கள் ரொம்ப மோசமான நிலையில் இருந்தார்கள் - இயக்குநர் ரமேஷ் செல்வன்

“ முன்னா ” படத்தின் இசை வெளியீட்டு விழாவில் சின்ன தயாரிப்பாளர்கள் நிலைமை குறித்து இயக்குநர் ரமேஷ் செல்வன் பகிர்ந்துள்ளார். 
 
ஸ்ரீ தில்லை ஈசன் பிக்சர்ஸ் பட நிறுவனம் சார்பில் ராமு முத்துசெல்வன் தயாரித்துள்ள படம் “ முன்னா ” இப்படத்தின் சங்கை குமரேசன் இயக்கி இருக்கிறார். இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று நடைபெற்றது. விழாவில் பல சிறப்பு விருந்தினர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.
 
அந்த விழாவில் பேசிய இயக்குநர் ரமேஷ் செல்வன், "சின்ன தயாரிப்பாளர்கள் எல்லாம் ரொம்ப மோசமான நிலையில் இருந்தார்கள். இப்போது தயாரிப்பாளர் சங்கம் மாறியிருக்கிறது அதனால் நல்லது நடக்கும். இந்த முன்னா படக்குழுவினர் தயாரிப்பாளர் சங்கத்தை அணுகுங்கள். அவர்கள் உதவுவார்கள் என்றார்.