1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By siva
Last Modified: புதன், 27 ஏப்ரல் 2022 (09:28 IST)

என் படத்தை ரிலீஸ் செய்ய உதவுங்கள்: எலான் மஸ்க் இடம் கோரிக்கை வைத்த தமிழ் இயக்குனர்

elan musk
தமிழ் திரையுலகின் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன் தனது படத்தை ரிலீஸ் செய்ய எலான் மஸ்க் இடம் சமூக வலைதளம் மூலம் உதவி கேட்டுள்ளார் 
 
சமீபத்தில் எலான் மஸ்க் 43 பில்லியன் அமெரிக்க டாலருக்கு டுவிட்டரை வாங்கினார் என்பது தெரிந்ததே 
 
இந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் நரகாசுரன் என்ற படத்தை இயக்கிய கார்த்திக் நரேன், அந்த படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் உள்ளார்.
 
 இந்த படத்தின் தயாரிப்பாளர் கௌதம் மேனனுக்கு ஏற்பட்ட பொருளாதார் பிரச்சனை காரணமாகவே இந்தப் படம் முடங்கிக் கிடக்கிறது 
 
இந்த நிலையில் தனது இன்ஸ்டாகிராமில் தனது நரகாசுரன் படத்தை ரிலீஸ் செய்ய உதவி செய்ய வேண்டும் என்று அவர் எலான் மஸ்க் இடம் கோரிக்கை விடுத்துள்ளார். அவரது கோரிக்கையை எலான் மஸ்க் ஏற்றுக் கொள்வாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்