செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 17 நவம்பர் 2018 (11:21 IST)

நெட்பிளிக்ஸில் வெளியாகிறது ஐந்தரை மணிநேர வட சென்னை!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், அமீர், ஆண்ட்ரியா மற்றும் பலர் நடிப்பில் கடந்தமாதம் ஆயுதபூஜையின் போது வெளியான வடசென்னை பாகம் ஒன்று நெட்பிளிக்ஸில் வெளியாக இருக்கிறது.

வெற்றிமாறனின் கனவுப் படமான வடசென்னைப் படத்தின் முதல் பாகம் நீண்ட இழுபறிக்குப் பிறகு இந்தாண்டு வெளியானது. கிட்டதட்ட 2 மணிநேரம் 40 நிமிடம் நேரம் நீளம் இருந்த வடசென்னைப் படம் திரையரங்குகளுக்கான எடிட் செய்யப்பட்டதானாம். ஆனால் வட சென்னைப் படத்தின் ஒரிஜினல் வெர்ஷன் கிட்டத்தட்ட ஐந்தரை மணிநேரம் ஓடக்கூடியதாம்.

படத்தின் இரண்டாம் பாதியில் ராஜன், குணா, பழநி, தம்பி, சந்திரா போன்றோரின் கதையின் பெரும்பகுதி படத்தின் நீளம் கருதி வெட்டப்பட்டுவிட்டதாம். அதனால் தற்போது நெட்ஃபிளிகஸில் வெளியிடும் போது டைரக்டர்ஸ் கட் என சொல்லப்படும் முழுப் படத்தையும் வெளியிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

மேலும் ராஜனின் கதையான ராஜன் வகையறா தனியாக வெப் சீரிஸாகவும் வெளியாக இருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.