புதுக் கூட்டணியை வாழ்த்திய பிரபலங்கள்
பரியேறும் படத்தின் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு நேற்று வெளியானது.
பரியேறும் பெருமாளின் ஏகோபித்த வெற்றி மாரி செல்வராஜை கோலிவுட்டின் முக்கியமான இயக்குனராக்கியுள்ளது. தற்போது அவர் இயக்கும் அடுத்த படம் குறித்து அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. கலைப்புலி தாணு தயாரிக்க இருக்கும் அந்தப் படத்தில் நடிகர் தனுஷ் கதாநாயகனாக நடிக்க இருக்கிறார். இன்னும் பெயர் சூட்டப்படாத இந்தப் படத்தின் இப்படத்தின் இசையமைப்பாளராக சந்தோஷ் நாராயணன் ஒப்பந்தமாகியுள்ளார். மற்ற நடிகர் நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக்கலைஞர்கள் விவரம் விரைவில் வெளியாக இருக்கிறது.
இந்த படத்தின் அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து தங்கள் வாழ்த்துகளையும் மகிழ்ச்சையையும் மாரி செல்வராஜுக்குத் தெரிவித்து வருகின்றனர். அதில் முக்கியமாக பரியேறும் பெருமாள் படத்தின் தயாரிப்பாளர், இயக்குனர் பா ரஞ்சித் டிவிட்டரில் ‘மிக அற்புதமான செய்தி!!! அண்ணன் “கலைப்புலி” தாணு அவர்களின் அரவணைப்பில், தன் மிகச்சிறந்த நடிப்பில் சிறக்கும் தனுஷ் அவர்களை இயக்கும் பொறுப்பை ஏற்ற தம்பி மாரி செல்வராஜுக்கு என் இதயம் கனிந்த அன்பும்! வாழ்த்துகளும்! பெரும் மகிழ்ச்சி!! தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
அதைத் தொடர்ந்து பரியேறும் பெருமாள் படக் கதாநாயகன் கதிர் தனது வாழ்த்துக்களைப் பகிர்ந்துள்ளார். அதில் ‘மகிழ்ச்சியான செய்தி, அருமையான கூட்டணி, இந்த படத்தைக் காண இப்போதே ஆவலாக உள்ளேன். மாரி செல்வராஜ் அண்ணனுக்கு வாழ்த்துகள். தனுஷ் அவர்களுக்கும் தாணு அவர்களுக்கும் நன்றி’ என தெரிவித்துள்ளார்.
மேலும் எழுத்தாளர்கள் ஆதவன் தீட்சன்யா மற்றும் வாசுகி பாஸ்கர் போன்ற பிரபலங்களும் தங்கள் வாழ்த்துகளைப் பகிர்ந்துள்ளனர்.