திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By VM
Last Modified: புதன், 14 நவம்பர் 2018 (10:38 IST)

புரட்சியை உருவாக்கிய இயக்குனரின் படத்தில் தனுஷ்!

‘பரியேறும் பெருமாள்’ படத்தை இயக்கிய மாரி செல்வராஜின் புதிய படத்தில் தனுஷ் நாயகனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
 
காலா பட இயக்குனர் பா.இரஞ்சித்  தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான படம் ‘பரியேறும் பெருமாள்’. கதிர், ஆனந்தி, மாரிமுத்து உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பெரும் வரவேற்பைப் பெற்றது. 
 
இந்தப் படத்தை பார்த்த 
 
தனுஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், வெகுவாக பாராட்டி உள்ளார். “பரியேறும் பெருமாள் படம் பார்த்துவிட்டேன். அமர்க்களமாக இருக்கிறது. படத்தில் காட்டப்பட்ட யதார்த்தமும் வாழ்க்கைமுறையும் நாம் அங்கே இருப்பது போல் உள்ளது.
 
மொத்த படக்குழுவினருக்கும் வாழ்த்துகள். இயக்குநர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் அடுத்து நான் நடிக்கவுள்ள படத்தை தாணு தயாரிக்கவுள்ளார். அவர் போன்ற திறமைசாலிகளுடன் இணைவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.” என்று தெரிவித்திருக்கிறார்.