தமிழ் மொழி படங்களுக்கு என தனி ஓடிடி… இயக்குனர் சேரன் வேண்டுகோள்!

Last Modified சனி, 3 ஜூலை 2021 (15:38 IST)

இயக்குனர் சேரன் தமிழ் மொழிப் படங்களுக்கு என தனியாக ஓடிடி தொடங்க வேண்டும் என தமிழக அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

கொரோனா தொற்று காரணமக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக திரையரங்குகள் இயங்குவதில் சிக்கல் எழுந்துள்ளது. இதனால் பல படங்கள் ஓடிடி தளங்களுக்கு சென்றுவிட்டன. ஆனால் அங்கேயும் பெரிய நடிகர்கள் மற்றும் இயக்குனர்களின் படங்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுகிறது. இந்நிலையில் மலையாள படங்களை வெளியிட கேரள அரசே தனி ஓடிடி தொடங்கவேண்டும் என்ற கோரிக்கை வைக்கப்பட்டது. அதை இப்போது கேரள அரசு பரிசீலித்த அரசு நவம்பர் 1 ஆம் தேதி இந்த ஓடிடி பயன்பாட்டுக்கு வரும் என்று தெரிவித்துள்ளது.

இதை சுட்டிக்காட்டியுள்ள தமிழ் திரைப்பட இயக்குனர் மற்றும் நடிகர் சேரன் ‘இதுபோல தமிழ் மொழிக்கும் தனி ஓடிடியை தமிழக அரசு கொண்டுவர வேண்டும். அப்போதுதான் குறைந்த பட்ஜெட்டில் எடுக்கப்படும் படங்கள் ரிலீஸாவதில் சிக்கல் இருக்காது’ எனக் கூறியுள்ளார்.
இதில் மேலும் படிக்கவும் :