சர்கார் கதைக்காக 40 நாள் இரவு பகலாக உழைத்தோம் –வசன கர்த்தா ஜெயமோகன்
சர்கார் படக்கதை திருட்டு விவகாரம் தொடர்பாக அந்தப் படத்தின் வசனகர்த்தாவாகப் பணியாற்றிய ஜெயமோகன் தனது கருத்தைப் பதிவு செய்துள்ளார்.
சர்கார் கதை திருட்டு சம்மந்தமாக உதவி இயக்குனர் வருண் ராஜேந்திரன் என்பவர் கொடுத்த புகாரை விசாரித்த தமிழ் திரை எழுத்தாளர்கள் சங்கம் சர்கார் கதையும் வருணின் செங்கோல் கதையும் ஒன்றுதான் எனக் கூறியுள்ளது. இதனை இயக்குனர் முருகதாஸ் மறுத்துள்ளார்.
இதுசம்மந்தமான வழக்கின் விசாரணை இம்மாதம் 30-ந்தேதி சென்னை உயர்நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர இருக்கிறது. தற்போது இந்த படத்தின் வசனகர்த்தா சர்கார் கதை திருட்டு சம்மந்தமாக தனது கருத்தைத் தெரிவித்துள்ளார். தனது வலைதளத்தில் இது எழுதியுள்ள பதிவில் அவர் கூறியுள்ளதாவது;-
‘சர்க்கார் படம் நான் பணியாற்றியது. பணியாற்றியது என்றால் சென்ற இருபதாண்டுகளில் நான் செய்த உச்சகட்ட உழைப்பே இந்தப் படம்தான். கிட்டத்தட்ட ஒன்றரை மாதம் தொடர்ச்சியாக சென்னையில் தங்கி காலை முதல் இரவு வரை காட்சி காட்சியாக விவாதித்து உருவாக்கியது. தொடங்கும்போது வெறும் ஒரு மெல்லிய ஒற்றைவரிதான் கையிருப்பு. ’சிவாஜிகணேசன் ஓட்டையே கள்ள ஓட்டு போட்டுட்டாங்கசார். அதான் நம்ம கதை!’ என்ற புள்ளியில் இருந்து ஆரம்பித்தது.
க
தைத் திருட்டு சம்மந்தமாக அவர் கூறியதாவது ‘இந்த கதைத்திருட்டு போன்ற செய்திகளை நாம் நம்ப விரும்புகிறோம், ஏனென்றால் இந்தச் செய்திகளிலேயே ஒரு வணிகசினிமா டெம்ப்ளேட் உள்ளது. ஏழைX பணக்காரன், எளியவன்X வென்றவன் என்ற முடிச்சு. ’அடாடா ஏழை அசிஸ்டெண்ட் டைரக்டரோட கதைய சுட்டுட்டாண்டா” .நாம் எங்கே அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டும் என்பதும் எழுதப்பட்டுள்ளது அதில். உண்மையில் இந்த ஒருவரியையே விஜய்யை வைத்து படமாக ஆக்கலாம். அதே டெம்ப்ளேட்டில்’ எனக் கூறியுள்ளார்.