1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 5 நவம்பர் 2018 (13:50 IST)

ஷாருக்கான் வீட்டின் முன் கழுத்தை அறுத்துக் கொண்ட ரசிகர்

பிரபல பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கானை அவரது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் போது, பார்க்க முடியவில்லை என்பதால் ரசிகர் ஒருவர் கழுத்தை அறுத்துக் கொண்ட சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
 
கொல்கத்தாவைச் சேர்ந்த சலீம் (வயது 35) என்பவர் ஷாருக்கானை காண மும்பை வந்திருந்தார். ஆனால், அவரால் ஷாருக்கானைப் பார்க்க முடியால் போனது. இதனால் மனமுடைந்த சலீம் தனது கழுத்தை அறுத்துக் கொண்டார்.
 
இதைக் கண்ட அங்கிருந்த போலீசார் அவரை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். தற்போது அவர் நல்ல நிலையில் இருப்பதாகவும், உயிருக்கு எந்த ஒரு ஆபத்தும் இல்லை எனவும் போலீசார் கூறியுள்ளனர்.
 
ஷாருக்கானை பார்க்க முடியாததால் ரசிகர் செய்த இந்த விபரீத காரியம் திரைத்துறையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.