1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By
Last Updated : செவ்வாய், 30 அக்டோபர் 2018 (11:22 IST)

அவனபோய் லவ் பண்ணிட்டியே!! பெற்ற மகளை எரித்துக் கொன்ற தந்தை

ஆந்திராவில் வேற்று ஜாதிப் பையனை காதலித்த மகளை அவரது தந்தையே எரித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
 
ஆந்திராவில் சமீபகாலமாக ஆவணக்கொலைகள் அதிகரித்த வண்ணம் உள்ளது. சாதி மாற்றுத் திருமணத்தால் பிரனய் குமார் என்ற வாலிபரை அவரது காதல் மனைவி அம்ருதாவின் தந்தை கூலிப்படையை ஏவி கொடூரமாக கொலை செய்தார். அதை தொடர்ந்து இதே போல் ஜாதி மாற்றுத் திருமணத்தால் குமார் என்ற வாலிபரும் படுகொலை செய்யப்பட்டார். இது நாடெங்கும் பெரும் அதிர்வலைகளைக் கிளப்பியது. 
 
இந்நிலையில் ஆந்திரவில் நாகிரெட்டிபள்ளி கிராமத்தைச் சேர்ந்த சைதன்யா என்ற வாலிபரும் அதேபகுதியில் வசித்து வரும் இந்திரஜா என்ற பெண்ணும் காதலித்து வந்தனர். இருவரும் வெவ்வேறு ஜாதியை சேர்ந்தவர்கள் என்பதால் இந்த காதலுக்கு இந்திரஜாவின் தந்தை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
 
இதனால் இந்திரஜா வீட்டில் இருந்து வெளியேற முடிவு செய்திருந்தார். இதனையறிந்த அவரது தந்தை பெற்ற மகள் என்றும் பாராமல் இந்திரஜா மீது, பெட்ரோல் வைத்து தீவைத்துள்ளார். இதில் உடல் கருகி இந்திரஜா சம்பவ இடத்திலேயே பலியானார்.
 
தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த காவல் துறையினர், இந்திரஜாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த கொடூர செயலில் ஈடுபட்ட அவரது தந்தையை போலீஸார் கைது செய்துள்ளனர். பெற்ற மகளை தந்தையே எரித்துக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.