செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 5 நவம்பர் 2018 (13:13 IST)

விஜய், ரஜினியை பின்னுக்கு தள்ளிய ஷாருக்கான்

பிரம்மாண்ட இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 600 கோடி ரூபாய் செலவில் உருவாகிவரும்  2.O படம் எதிர்பார்ப்புகளை ஈடு செய்யுமா என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
 


300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் ஆரம்பிக்கப்பட்ட 2.0 படத்திற்கு தற்போது 600 கோடி ரூபாய் செலவாகியுள்ளது என ரஜினிகாந்த் மூலம் சொல்ல வைத்திருக்கிறார்கள் இந்த படக்குழுவினர் . இவ்வளவு செலவு செய்து எடுக்கப்பட்ட படத்தின் டீசர், ட்ரெய்லர் சாதனையைப் படைக்காமலிருப்பது ரஜினிகாந்திற்கும் படக்குழுவினருக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
அதைவிட குறைந்த செலவில் எடுக்கப்பட்ட சர்கார் டீசர் ஏற்படுத்திய சாதனையை 2.O பட டீசர், ட்ரெய்லரால் முறியடிக்க முடியவில்லை. 2.O ட்ரெய்லர் வெளியான 24 மணி நேரத்தில் தமிழில் 77 லட்சம் பார்வைகளையும், தெலுங்கில் 35 லட்சம் பார்வைகளையும், இந்தியில் 1 கோடி பார்வைகளையும் பெற்றுள்ளது.
 
 காரணம் 2.O ட்ரெய்லருக்குப் போட்டியாக ஷாருக்கான் நடித்துள்ள ஜீரோ ட்ரெய்லர் அமைந்துவிட்டது. அந்த ட்ரெய்லர் 24 மணி நேரத்தில் 6 கோடி பார்வைகளைக் கடந்து அபார சாதனை படைத்துள்ளது.
 
டிரென்டிங்கிலும் ஜீரோ படத்துக்கு அடுத்து இரண்டாவது இடத்தில்தான் 2.O உள்ளது.