திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Updated : செவ்வாய், 1 ஜூன் 2021 (21:02 IST)

தோனியின் புதிய வீடு...இணையதளத்தில் வைரல்

இந்திய கிரிக்கெட் அணியின்  முன்னாள் கேப்டன் தோனி. இவர் 3 வகையான போட்டிகளிலும் கோப்பை வென்று கொடுத்த கேப்டன் என்ற சாதனை படைத்தவர்.

சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து அவர் ஓய்வு பெற்ற்றாலும் அவர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குக் கேப்டனாகப் பொறுப்பேற்ற்ய் விளையாடிவருகிறார்.

இந்நிலையில், தல தோனி சமீபத்தில் புனேயில்  ஒரு வீடு வாங்கியுள்ளார்.

தோனி தற்போது ரஞ்சியில் உள்ள பண்ணை வீட்டில் வசித்து வரும் நிலையில் இவர் ஏற்கனவே மும்பையில் ஒரு பங்களா ஒன்றை வாங்கினார்.

இந்நிலையில், சமீபத்தில் தல தோனி புனேயில் உள்ள பிம்ப்ரி சிங்க்வாதில் புடிய வீடு ஒன்று வாங்கியுள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை தோனியின் மனைவி சாக்‌ஷி தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்தார்.

தற்போது வாங்கியுள்ள வீடு புனேயில் உள்ள பணக்காரர்கள் அதிகம் வசிக்கும் பகுதியாகும்.

மேலும் தனது வீட்டில் புதியப் ஒரு குதிரைகளை வாங்கி வளர்த்துவருவது குறிப்பிடத்தக்கது.