திங்கள், 27 ஜனவரி 2025
  1. விளையாட்டு
  2. விளையாட்டு
  3. செய்திகள்
Written By
Last Updated : சனி, 27 மார்ச் 2021 (18:23 IST)

புனே போட்டியை பார்க்க மலை ஏறிய சச்சினின் தீவிர ரசிகர்!

சச்சினின் தீவிர ரசிகரான சுதிர் குமார் சவுத்ரி புனே வில் நடந்த இரண்டாவது ஒருநாள் போட்டியைக் காண மலையேறி சென்றுள்ளார்.

கொரோனா அச்சம் காரனமாக புனேவில் நடக்கும் ஒரு நாள் போட்டிகளில் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவதில்லை. இந்நிலையில் சச்சினின் தீவிர ரசிகரும் இந்தியா போட்டிகளை ஒன்றைக் கூட தவறவிடாதவருமான சுதிர் குமார் சவுத்ரி புனே மைதானத்துக்கு அருகே உள்ள ககுன்ஜி என்ற மலைமேல் ஏறி அங்கிருந்தபடி போட்டியைப் பார்த்துள்ளார். இது சம்மந்தமான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.