உதயநிதி ஸ்டாலின் தயாரிப்பில் நடிக்கிறாரா அஜித்?
அஜித் நடிப்பில் மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவாகியுள்ள விடாமுயற்சி திரைப்படம் பிப்ரவரி 6 ஆம் தேதி ரிலீஸாகிறது. இந்த படத்தில் அஜித்தோடு, அர்ஜுன், ஆர்வ, த்ரிஷா, ரெஜினா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவாளராகப் பணியாற்ற அனிருத் இசையமைக்கிறார். ஓம்பிரகாஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இந்நிலையில் படத்தின் தமிழக ரிலீஸ் உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இதை அதிகாரப்பூர்வமாக லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இதையடுத்து அஜித் நடிக்கும் அடுத்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது.
அஜித் கார் ரேஸ்களில் கலந்துகொண்டு அக்டோபர் மாதம் தான் சினிமாவுக்குத் திரும்பவுள்ளார். அப்போது அவர் நடிக்கும் படத்தை ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் தயாரிக்க, விஷ்ணுவர்தன் இயக்கவுள்ளதாக சொல்லப்படுகிறது.