புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 15 ஜூன் 2023 (20:11 IST)

விஜய் பட நடிகை வீட்டில் விலையுயர்ந்த பொருட்கள் திருட்டு

இந்தி சினிமாவின் முன்னணி நடிகை ஷில்பா ஷெட்டி, இவர் பாஜிகர் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். அதன்பின்னர், தமிழிலில் பிரபுதேவாவுடன் மிஸ்டர் ரோமியோ படத்தில் நடித்தார். இதையடுத்து, குஷி படத்தில், விஜயுடன் இணைந்து ஒரு பாடலுக்கு ஆடி ரசிகர்களை கவர்ந்தார்.

பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாகவும், ஐபிஎல் அணியின் பங்குதாரராகவும் வலம் வருகிறார்.

இந்த நிலையில், தற்போது இவர் இந்தியன் போலீஸ் போர்ஸ் என்ற வெப் தொடரில் நடித்துள்ளார். இத்தொடரை ரோஹித் ஷெட்டி இயக்கியுள்ளார்.

இந்த நிலையில், ஷில்பா ஷெட்டியின் வீடு மும்பையில் உள்ள ஜூஹூ பகுதியில் அமைந்துள்ளது.

இவரது பிறந்த நாளை முன்னிட்டு தன் குடும்பத்தினருடன் அவர் இத்தாலிக்குச் சுற்றுலா சென்றுள்ளார்.

இந்த நிலையில், அவரது வீட்டில் விலையுயர்ந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

இதையடுத்து, அவர் தரப்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டதன் அடிப்படையில் வழக்கு ஒன்று பதிவு செய்த போலீஸார், இதுதொடர்பாக 2 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.