புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By Sinoj
Last Modified: வியாழன், 15 ஜூன் 2023 (20:15 IST)

அரசியலில் முதலடி ? ....''பேனர், கட் அவுட்கள் வைக்கக் கூடாது'' - நடிகர் விஜய் உத்தரவு

தமிழ் சினிமாவின் முன்னண் நடிகர் விஜய். இவர் தற்போது, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், லியோ என்ற படத்தில் நடித்து வருகிறார்.  இதற்கிடையே,  நடிகர் விஜய் பிளஸ்2  தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற 1500 மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கவுள்ளார்.

விஜய் அரசியல் பிரவேசத்திற்கான அறிகுறியாகத்தான் இதை செயல்படுத்த உள்ளதாகவும், இதற்கான வேலைகளை புஸ்ஸி ஆனந்த் தயார் செய்து வருவதாகவும் தகவல் வெளியானது.

இதற்கான ஏற்பாடுகளை விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
அதன் முதற்கட்டமாக பல்வேறு தலைவர்களின் சிலைக்கு மரியாதை செய்து வருகின்றனர்.

இந்த விழா நாளை மறுநாள் சனிக்கிழமை( 17 ஆம் தேதி)    காலை 9 மணிக்கு தொடங்கவுள்ளது. நடிகர் விஜய் காலை 9.30 மணிக்கு மண்டபத்திற்கு வருகிறார்.

அன்று 5000 மாணவர்களுக்கு காலை மற்றும் மதிய உணவு விருந்தளிக்கவுள்ளார் நடிகர் விஜய்.

எனவே,. இந்த நிகழ்ச்சியை ஒட்டி, விஜய்  மக்கள் இயக்கத்தினர் தீவிரமாக இயங்கி  வரும் நிலையில், இதுதொடர்பாக யாரும்  கட் அவுட்வைக்கக் கூடாது என்று விஜய் உத்தரவிட்டுள்ளார்.