தர்மதுரை 2… விஜய் சேதுபதிக்கு பதிலாக இவரா?
கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்னர் வெளியான தர்மதுரை படத்தின் பார்ட் 2 உருவாக்கலாமா என பிரபல இயக்குனர் ஆர் கே சுரேஷ் கேள்வி எழுப்பியுள்ளார்.
விஜய் சேதுபதி, தமன்னா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவான தர்மதுரை படம் இன்றோடு நான்காம் ஆண்டை நிறைவு செய்துள்ளது. இதையடுத்து இந்த படத்தை பற்றிய தனது நினைவுகளை டிவிட்டரில் பகிர்ந்து கொண்டார் இயக்குனர் சீனு ராமசாமி. அவரின் டிவீட்டை ர்டிவீட் செய்த தயாரிப்பாளரும் நடிகருமான ஆர் கே சுரேஷ் பார்ட் 2 பிளான் பண்ணலாமா மாமா. நான் ரெடி எனக் கூறியுள்ளார். ஆனால் இந்த தயாரிப்பாளருக்கும் நடிகர் விஜய் சேதுபதிக்கும் கருத்து வேறுபாடு எழுந்துள்ளதால் அவர் நடிக்க முன் வரமாட்டார் என சொல்லப்படுகிறது.
ஆனால் இப்போது தயாரிப்பாளர் ஆர் கே சுரேஷே நடிகராகி விட்டதால் பார்ட் 2 படத்தில் அவரே நடிக்க ஆசைப்படுகிறாராம். இதற்கான வேலைகள் இப்போது தொடங்கி விட்டதாக சொல்லப்படுகிறது.