புதன், 25 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: சனி, 6 ஏப்ரல் 2019 (12:46 IST)

கோவா பீச்சில் ஹாயாக காற்றுவாங்கும் தான்யா பாலகிருஷ்ணன்.!

குறும்படங்களில் நடித்து பின்னர்  வெள்ளித்திரையில்  அறிமுகமாகி தமிழ் சினிமாவின் பெயர்போன நடிகைகளுள் ஒருவராக வலம் வருகிறார். ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் வெளியான  ‘7ஆம் அறிவு  படத்தில் ஸ்ருதி ஹாசனுக்கு தோழியாக நடித்து ரசிகர்கள் மனதில் இடம்பிடித்தார். 

அதனையடுத்து ‘காதலி சொதப்புவது எப்படி ’  ‘ராஜா ராணி’ போன்ற  பல படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகையாக வலம் வந்தவருக்கு  தெலுங்கு சினிமாவிலும் லக் அடித்தது. அதனை தொடர்ந்து தற்போது  கன்னடம் மொழி படங்களிலும் அதிக கவனம் செலுத்தி வருகிறார் நடிகை தான்யா.   

இந்நிலையில் தற்போது படங்களை தொடர்ந்து ‘வாட்ஸ்அப் வேலைக்காரி’ என்ற வெப் சீரியலில் நடித்துவரும் தான்யா சமீபத்தில் தனது தோழிகளுடன் கோவா சென்றுள்ளார். அப்போது அங்கு எடுத்துக்கொண்ட சில புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் தொடர்ச்சியாக பதிவிட்டு வருகிறார்.