1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Modified: புதன், 24 ஆகஸ்ட் 2022 (15:09 IST)

வாத்தி படத்தின் தமிழக உரிமையைக் கைப்பற்றிய பிரபலம்… வெளியான தகவல்!

வாத்தி படம் டிசம்பர் மாதத்தில் ரிலீஸ் ஆகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

தனுஷ் நடித்துவரும் தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவாகும் திரைப்படத்திற்கு ‘வாத்தி’ மற்றும் ’சார்’ என்ற டைட்டில்கள் வைக்கப்பட்டு உள்லது. இந்த படத்தில் தனுஷ் ஜோடியாக சம்யுக்தா மேனன் நடிக்கிறார். இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டுள்ளன. இந்த படத்தை வெங்கட் அட்லோரி இயக்கி வருகிறார்.

படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கி முடிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நாளை படத்தின் முதல் லுக் தற்போது வெளியாகியுள்லது. மேலும் டீசர் நாளை வெளியாகும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படம் வரும் டிசம்பர் மாதம் வெளியாகும் என தெரிகிறது.

இந்த படத்தை தமிழகத்தில் கோபுரம் பிலிம்ஸ் அன்புச்செழியன் ரிலீஸ் செய்ய உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கனவே தீபாவளிக்கு வெளியாகும் சிவகார்த்திகேயனின் பிரின்ஸ் திரைப்படத்தையும் அன்புச்செழியன்தான் ரிலீஸ் செய்ய உள்ளார்.