திங்கள், 27 ஜனவரி 2025
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By
Last Updated : திங்கள், 15 ஜூலை 2019 (17:21 IST)

'வடசென்னை 2' கைவிடப்பட்டதா? தனுஷ் விளக்கம்

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கிய 'வடசென்னை' திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இருப்பினும் ஏற்கனவே திட்டமிட்டபடி இந்த படத்தை மூன்று பாகமாக தயாரிக்க தனுஷும் வெற்றுமாறனும் திட்டமிட்டு வருகின்றனர். தற்போது இருவரும் இணைந்து உருவாகி வரும் 'அசுரன்' படத்தை அடுத்து 'வடசென்னை 2' படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது
 
இந்த நிலையில் இன்று திடீரென ஊடகங்களில் 'வடசென்னை 2' திரைப்படம் கைவிடப்பட்டதாகவும், திரைப்படத்திற்கு பதிலாக 'வடசென்னை 2' வெப் சீரிஸ் ஆக உருவாக்க தனுஷ் திட்டமிடப்பட்டதாகவும் செய்திகள் வெளிவந்தன. இதனால் தனுஷ் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
 
இந்த நிலையில் இதுகுறித்து தனுஷ் தனது டுவிட்டர் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ளார். 'வடசென்னை 2' படம் உள்பட எனது படங்கள் குறித்து ஊடகங்களில் வெளிவரும் தகவல்களை எனது ரசிகர்கள் நம்ப வேண்டாம். என்னுடைய அதிகாரபூர்வ டுவிட்டர் பக்கத்தில் வரும் செய்தியே சரியானதாகும். 'வடசென்னை 2' திரைப்படம் நிச்சயம் உருவாகும்' என்று தனுஷ் கூறியுள்ளார். 
 
தனுஷின் இந்த டுவிட்டை பார்த்தவுடன் தான் அவருடைய ரசிகர்கள் நிம்மதி அடைந்தனர். உடனே வடசென்னை 2 என்ற ஹேஷ்டேக்கையும் அவர் டிரெண்டுக்கு கொண்டு வந்துள்ளனர்.